உங்களுக்கு தெரியுமா பச்சை உணவுகள்… வேகவைத்த உணவுகள்: எது நல்லது?

சில உணவுகளை பச்சையாக சாப்பிடலாம், சில உணவுகளை வேக வைத்து தான் சாப்பிட வேண்டும். சில உணவுகளை வேகவைக்காமல் சாப்பிடும் போது உடல் வெப்பநிலை அதிகரித்து முடி உதிர்தல் மற்றும் தூக்கமின்மை உட்பட பல பிரச்சனைகள் ஏற்படலாம்.

பச்சை உணவுகளை எப்படி சாப்பிடலாம்?
காய்கறி, பழங்கள் போன்றவற்றை மதிய உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. இரவு உணவு மற்றும் குளிர் காலத்தில் பச்சை உணவுகள் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

* காய்கறி மற்றும் பழங்களை ஜூஸாக பருகுவது சிறந்த முறை. இதனால் நம் உடலுக்கு ஊட்டச்சத்துக்கள் கிடைப்பது மட்டுமின்றி செரிமானம் எளிதில் அடையும்.
ஆப்பிள், பப்பாளி, பெர்ரி, அன்னாசி, பேரிக்காய், துளசி போன்ற உணவுகளை பச்சையாக அல்லது ஜூஸாக அப்படியே சாப்பிடலாம்.
* இஞ்சி, மஞ்சள், கொத்தமல்லி, வெந்தயம், சீரகம் போன்ற உணவுப் பொருட்களை காய்கறி சூப் போன்று சமைத்து சாப்பிடுவது நல்லது.
காய்கறிகளை வேக வைக்க வேண்டுமா?

ஆயுர்வேத முறையில், காய்கறிகளை வேகவைத்து சாப்பிட வேண்டும். ஏனெனில் காய்கறியில் இயற்கையாகவே உள்ள கடினமான இனிப்பு, வறட்சி பச்சையாக சாப்பிடுவதால் சிலருக்கு செரிமான பிரச்சனையை உண்டாக்கும்.

உணவுகளை எப்படி சமைக்க வேண்டும்?
* உணவுகளில் உள்ள ஊட்டச்சத்துக்களை, குறைவான தீயில் வேக வைப்பது சிறந்த முறையாகும். ஏனெனில் இதனால் உணவில் ஊட்டச்சத்து தங்குவது மட்டுமின்றி, செரிமானமும் சீராகும்.

* உணவை சமைக்கும் போது மஞ்சள், சீரகம், மிளகு சேர்த்து சமைக்க வேண்டும். இதனால் உடலின் வலிமை அதிகரிக்கும்.
* ஆனால் ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தும் உணவுகளை தவிர்ப்பது மிகவும் நல்லது. இதனால் செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கலாம்.

Add Comment

%d bloggers like this: