உங்களுக்கு தெரியுமா ஆண்மையை பெருக்கும் ஒட்டகப் பால் !!முயன்று பாருங்கள்!!

நமக்கு தெரிந்ததெல்லாம் ஆவின் பால், பசும் பால் , எருமை பால் அவ்வளவுதான். கிராமங்களில் சிலருக்கு ஆட்டு பாலின் சுவை தெரியும். எத்தனை பேர் ஒட்டகப் பாலை குடித்திருக்கிறீர்கள்?

அரபு நாடுகளில் ஒட்டகம் அதிகம் இருப்பதால் அங்கு இருப்பவர்கள் அதனை பற்றி அறிந்திருக்கலாம் . ஒட்டக பாலில் டீ போட சொல்லி வைகை புயல் வடிவேலு “வெற்றி கொடி கட்டு” படத்தில் ஒரு நகைச்சுவை காட்சியில் நடித்திருப்பதை நாம் பார்த்திருப்போம். அந்த ஒட்டக பாலை பற்றிய பதிவு தான் இது.

ஒட்டகத்தின் பாலில் தனித்தன்மை வாய்ந்த இன்சுலின் உள்ளது இது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது. பசும்பாலை விட குணமளிக்கும் ஆற்றல் அதிகம் உள்ளது ஒட்டக பாலில் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?
ஆம்! பசும்பால் மற்றும் எருமை பாலை விட அதிக நன்மைகள் அடங்கியது ஒட்டக பால். பலவித ஆய்வுகளும் பசும்பாலைவிட ஆரோக்கியமானது ஒட்டக பால் என்று கூறியிருக்கின்றன. தாய்ப்பாலுக்கு நிகரான தன்மை ஒட்டக பாலில் உள்ளதாகவும் , குடிப்பதற்கும் , செரிமானம் ஆவதற்கும் எளிமையானது என்று கூறப்படுகிறது.

விட்டமின் பீ, சி சத்துக்களை நிறையக் கொண்ட ஒட்டகப் பாலில், பசுப் பாலில் இருப்பதைவிட பத்து மடங்கு அதிகமான இரும்புச் சத்து இருப்பதாக ஐ.நா. சபை அறிவித்துள்ளது. பசும்பாலை விட இனிப்புக் குறைவான ஒட்டகப் பால், வளைகுடா நாடுகளெங்கும் அபரிதமாக அருந்தி வருகின்றார்கள்.

பசும்பால் Vs ஒட்டகப் பால் :

பசும்பாலுக்கும் ஒட்டக பாலுக்கும் அடிப்படை வித்தியாசங்கள் உண்டு. ஒட்டகப் பாலில் அதிக அளவு இரும்பு, ஜின்க், பொட்டாசியம் , காப்பர் , சோடியம், மக்னீசியம் போன்றவை உள்ளன. பசும்பாலை விட அதிக புரத சத்து உள்ளது. வைட்டமின் ஏ மற்றும் பி2 அதிகமாக உள்ளது. பசும்பாலை விட கொலெஸ்ட்ரால் குறைவாக உள்ளது.
ஒட்டகப் பாலில் லாக்டோஸ் குறைவாக இருக்கும். ஆகவே லாக்டோஸ் அதிகம் எடுத்துக்கொள்ள முடியாதவர்களும் பருகும் விதத்தில் இருக்கும். ஆன்டிபாக்டீரியால் மற்றும் அன்டிவைரல் தன்மை பசும்பாலை விட அதிகம் உள்ளது.

எளிதில் ஜீரணம் :

எளிதில் கனத்து போகும் தன்மை இல்லாதால் பசும்பாலை விட எளிதில் ஜீரணமாகிறது. இப்போது உடல் ஆரோக்கியத்தில் ஒட்டக பாலின் நன்மைகளை அறிந்து கொள்ளலாம்.

ஒவ்வாமை இல்லை :

சிறு குழந்தைகளுக்கு பல உணவுகளால் ஒவ்வாமை ஏற்படுவதுண்டு. அவர்களுக்கு ஒட்டக பால் ஒரு சிறந்த தீர்வாகும். பால் அல்லது மற்ற பொருட்களில் ஒவ்வாமை கொண்ட 8 குழந்தைகளுக்கு தொடர்ந்து ஒட்டக பாலை கொடுத்து வர அவர்களின் ஒவ்வாமை குறைந்தது ஆய்வு பூர்வமாக நிரூபிக்கப்பட்டது. இதில் முக்கியமானது , இவர்களுக்கும் எந்த ஒரு பக்க விளைவும் ஏற்படவில்லை.

ஆண்மையின்மைக்கு :

ஆண்மையின்மை சமீப காலங்களில் அதிகரித்து வருவதால் பல இடங்களில் இந்தியாவில் ஒட்டகப்பால் உற்பத்தியை முக்கியப் படுத்தியிருக்கிறார்கள். ஒட்டகப்பால்ஆண்மையின்மையை போக்கும் ஆற்றல் கொண்டது.

நோயெதிர்ப்பு சக்தி:

ஒட்டகப் பாலில் நோய் எதிர்ப்பு புரதம் அதிகமாக உள்ளதால், நோயெதிர்ப்பு மண்டலத்தை தாக்கும் கிருமிகளை உள்ளே வரவிடாமல் செய்கிறது. மல்டிபிள் செலெரோசிஸ், க்ரோன் போன்ற வியாதிகள் வராமல் தடுக்கிறது.

ஆட்டிசம் :

ஆட்டிசத்துக்கான அறிகுறியை குறைக்கிறது. சில நேரங்களில் ஆட்டிசம் பாதிக்கப்பட்டவரை முற்றிலும் குணப்படுத்துகிறது. ஒட்டக பாலில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடென்ட் தன்மை தான் ஆட்டிஸத்தின் அறிகுறியை குறைக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஆட்டிசம் நோயாளிகள் ஒட்டக பாலை எடுத்துக் கொள்வதன் மூலம் சாந்தமான மன நிலையுடன், குறைந்த வெறித்தன்மையுடன் , தன்னை தானே அழித்துக்கொள்ளும் தன்மை குறைந்தும் காணப்படுவதாக கூறுகின்றனர்.

வயது முதிர்வு:

ஆல்பா ஹைட்ராக்சில் என்று ஒரு கூறு ஓட்டக பாலில் இருக்கிறது. அது மென்மையான கோடுகள் மற்றும் சுருக்கங்கள் சருமத்தில் தோன்றாமல் தடுக்கிறது. இதனால் வயது முதிர்வு தடுக்கப்படுகிறது.

நீரிழிவு:

 

நீரிழிவை போக்கும் தன்மை ஒட்டக பாலுக்கு உள்ளது. நீரிழிவை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் பல கூறுகள் ஒட்டக பாலில் அமைந்துள்ளன. இதில் இருக்கும் இன்சுலின் போன்ற புரதம் நீரிழிவின் தாக்கத்தை குறைக்கிறது. ஒட்டக பாலில் இருக்கும் இன்சுலின், இரத்தம் உறிஞ்சுதலை எளிதாக்குகிறது.

காச நோய் :

காச நோயை கட்டுப்படுத்துவதில் ஒட்டக பால் நல்ல தீர்வை தருகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஒட்டக பாலில் இருக்கும் ஆன்டிபாக்டீரியால் தன்மை ட்யூபெர்கோலி என்ற காசநோய் கிருமியை உடலில் இருந்து வெளியேற்றுகிறது. இதனால் காச நோய் கட்டுப்படுகிறது.
இன்னும் பலவிதமான ஆராய்ச்சிகள் ஒட்டக பாலின் நன்மைகள் குறித்து நடந்தேறி கொண்டே இருக்கின்றன. பசும்பாலுக்கு ஒரு மாற்றை தேடுபவரா நீங்கள்? ஆம் என்றால், ஒட்டக பாலை துணிந்து உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

தோல் வியாதி :

ஒட்டகப் பாலில் லெனோலின் அமிலம் உட்பட 6 வகையான அமிலங்கள் காணப்படுவதாகவும் உடலின் சுருக்கங்களை போக்குவது உள்ளிட்ட தோல் தொடர்பான வியாதிகளையும் நிவர்த்தி செய்வதாக உள்ளது என்றும் தெரிய வந்துள்ளது.

புற்று நோய் :

அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ஒரு வகை மருந்தை தயாரித்துள்ளனர். இந்த மருந்து புற்று நோயை குணமாக்கும் தன்மை உடையது.
ஒட்டக பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து தயாரிக்கபடும் இந்த மருந்து உடலில் நோய்-எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது . இது புற்றுநோய் செல்களை அளித்து விட்டு புதிய செல்களை உருவாக்குகிறது.

Add Comment

%d bloggers like this: