இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணா 2 வாரத்தில் தங்கம் போல் மின்னலாம்

வீட்டிலேயே கிடைக்கும் பொருட்களை கொண்டு இயற்கை முறையில் செய்யும் பேஷியல்களால் சருமத்திற்கு எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படுவதில்லை. வீட்டிலேயே செய்யக்கூடிய பேஷியல்களை பற்றி பார்க்கலாம்.

* உலர்ந்த சருமத்திற்கு தினமும் பாதாம் எண்ணெய் தேய்த்து வந்தால் நல்லது. பருக்கள் குழி அடையாளங்களையும் பாதாம் ஆயில் நாளடைவில் நீக்கிவிடும். ஆயில் கிடைக்காவிடில் பாதாமின் தோல் 3 – 5 எடுத்து தண்ணீர் சேர்த்து அரைத்து தினமும் முகத்தில் தேய்க்கலாம்.
* பச்சை நிற ஆப்பிளின் சாறு தோல் சுருக்கம், அரிப்பு, வெடிப்பு அனைத்திற்கும் மிக நல்லது. இதற்கு தினமும் பச்சை நிற ஆப்பிள் சாற்றை முகத்தில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்த பின்னர் நன்றாக காய்ந்தவுடன் கழுவி விட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் நல்ல மாற்றம் தெரிவதை காணலாம்.
* கடலை மாவு
கடலை மாவில் தயிர் சேர்த்து பிசைந்து பேஸ்ட் செய்து தேய்த்தால் பருக்கள் காணாமல் போய்விடும். பயித்தம் பயிறு மாவில் தண்ணீர் ஊற்றி குழைத்து தேய்த்து வந்தால் நிறம் கூடும்.
* தேன்
தேனில் பால், தயிர், அரைத்த எள்ளு எல்லாம் சரிசமமாக கலந்து தேய்த்து வந்தால் முகம் பளபளப்பாகவும், மிருதுவாகவும் ஆகும்.
* 1 தேக்கரண்டி கடலை எண்ணெயில் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து தேய்த்து வந்தால் முகப்பரு, கரும்புள்ளிகள் வரவே வராது.
* கண்களுக்கு கீழே கருவளையத்தை நீக்க மஞ்சளில் அன்னாசி சாறு சேர்த்து தேய்த்து வரவும்.

Add Comment

%d bloggers like this: