தலப்பாக்கட்டு மட்டன் பிரியாணி

குறிப்பு: சீரக சம்பா அரிசியில் செய்தால் நன்றாக இருக்கும். 1 கப் = 2 கப் நீர் சேர்க்கவேண்டும்.பாஸ்மதிக்கு 1 கப் = 1 1/2 கப் நீர் சேர்க்கவேண்டும்.

தேவையான பொருட்கள்:

மட்டன் 1/2 கிலோ
அரிசி – 4 கப்
வெங்காயம் – 2 பெரியது
தக்காளி – 2 பெரியது
தேங்காய்ப்பால் – 3 கப்
இஞ்சி – 1 பெரிய துண்டு
பூண்டுப்பல் – 6
நெய் – 100 கிராம்
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
தயிர் – 125 கிராம்
பச்சை மிளகாய் – 10
புதினா கொத்தமல்லி – தலா 1 கைப்பிடி
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
எண்ணெயில் வறுத்து பொடிக்க
கசகசா – 2 டீஸ்பூன்
பெருஞ்சீரகம் – 2 டீஸ்பூன்
ஏலக்காய் – 5
பட்டை – சிறுதுண்டு
பிரியானி இலை -3
கிராம்பு – 5
செய்முறை:

எண்ணெயில் வறுத்து பொடிக்க கொடுத்துள்ளவைகளை நைசாக பொடிக்கவும்.
கறியை சிறிது உப்பு+மஞ்சள்தூள்+தயிர் சேர்த்து பிரட்டி குக்கரில் 3 விசில் வரை வேகவைத்து தண்ணிரை அளந்து வைக்கவும்.
வெங்காயம்+தக்காளி அரியவும்.பச்சை மிளகாயை கிறவும்.இஞ்சி பூண்டை அரைக்கவும்.அரிசியை கழுவி 10 நிமிடம் ஊறவைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வெங்காயம்+பச்சை மிளகாய்+இஞ்சி பூண்டு+தக்காளி அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.
பின் பொடித்த பொடி சேர்த்து கிளறவும்.அடுப்பை சிம்மில் வைக்கவும்.இல்லையெனில் அடி பிடிக்கும்.
பின் கறிவேக வைத்த நீரை அளந்து அதற்க்கு தேவையானளவு நீர் 2ம் 3 கப் வருமாறு அளந்து ஊற்றி கொதிக்கவிடவும்.
கொதிவந்ததும் அரிசி+உப்பு சேர்க்கவும்.தண்ணீர் சுண்டி வரும் போது தேங்காய்ப்பால்+வேகவைத்த கறி சேர்க்கவும்.
நீர் சுண்டி வரும் போது புதினா கொத்தமல்லி+நெய் சேர்த்து தம்மில் 15 நிமிடம் போடவும். அல்லது 190°C முற்சூடு செய்த அவனில் 15 நிமிடம் வைத்து எடுக்கவும்.
சுவையான தலப்பாக்கட்டு மட்டன் பிரியாணி ரெடி!!

Add Comment

%d bloggers like this: