பெண்களுக்கு உண்டாகும் அழகு சார்ந்த பிரச்சனைகளும்!!தீர்வும்!!

அழகு சார்ந்த விஷயத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்னென்ன அவற்றிற்கான இயற்கை முறையில் தீர்வு என்ன என்பதை நாம் இப்போது பார்க்கலாம்.

உண்மையில் ஒவ்வொருவருக்கும் குறைகள் இருக்கும். அவற்றை ஏற்றுக்கொண்டு நிம்மதியாக இருப்பதில் தான் அழகு என்பது உள்ளது. இது போன்ற பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்னென்ன அவற்றிற்கான தீர்வு என்ன என்பதை நாம் இப்போது பார்க்கலாம்.

உடலெங்கும் வெளிறிய நிறமாற்றம் அடைந்த திட்டுத்திட்டாக புள்ளிகள் ஏறக்குறைய அனைத்து பெண்களுக்குமே வரக்கூடியது. இது கொழுப்பு செல்கள் சிதைவதால் திசுக்களில் உண்டாகும் பாதிப்பாகும். இதனை சரி செய்ய நல்லெண்ணெயில் மஞ்சள் கலந்து உபயோகிக்கலாம். அல்லது தினமும் விட்டமின் ஈ எண்ணெயை உபயோகித்தால் நல்ல பலன் கிட்டும்.

பரு ஒரு பொதுவான பிரச்சனைதான். வளரும் பருவத்தில் ஒவ்வொருவருக்கும் வரும் பிரச்சனைதான் இது. இது தழும்புகளை குறிப்பாக அதிகம் தொடவோ தேய்க்கவோ அல்லது கிள்ளவோ செய்யும்போது ஏற்படுத்தும். அதன் மீது கற்றாழை சாற்றை தடவினால் அவற்றின் கடுமை குறைந்து அதனை குணப்படுத்தும்.

கண்களில் ஓரத்தில் வரும் சுருக்கங்கள் முதுமை துவங்குவதால் காரணமாக ஏற்படுவது. இது மிகவும் சென்ஸிடிவான பகுதி என்பதால் அதிக ஈரப்பதம் தேவைப்படுகிறது. எனவே ஒரு நல்ல கண் க்ரீமை தேர்ந்தெடுத்து பயன்படுத்திவந்தால் இந்த பிரச்சனையைக் குறைக்கலாம்.

கடுமையான உழைப்பு மற்றும் மன அழுத்தம் காரணமாக கண்களுக்கு கீழ் ஏற்படும் பாதிப்பு இது. வெள்ளரிச் சாறு போன்ற இயற்கை வைத்தியங்கள் இந்த பிரச்சனையை ஒரு வார காலத்திற்குள் போக்கும் என்பதால் இது பற்றி நீங்கள் கவலை கொள்ளத் தேவையில்லை.

மிக அதிக அல்லது மிகக் குறைந்த ஈரப்பதத்தினால் வறண்ட பொலிவில்லா முடி பிரச்சனை ஏற்படலாம். இதனை தவிர்க்க தொடர்ந்து முடியை பராமரித்து வலுவூட்டுங்கள்.

Add Comment

%d bloggers like this: