இந்த ஜூஸை குடியுங்கள்வயிற்று வலி உடனே பறந்து போய்விடும்!!

ஆரோக்கியமற்ற உணவுகள், உடற்பயிற்சியின்மை, அல்சர், உணவை தவிர்த்தல், நேரம் தவறி சாப்பிடுதல் இது போன்ற பல காரணமாக வயிற்றில் அதிகப்படியான அமிலங்கள் உருவாகி வாய்வு, வயிற்று எரிச்சல் மற்றும் வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.

கடுமையான வயிற்று வலி பிரச்சனையை உடனடியாக போக்க, அற்புதமான ஜூஸ் இதோ,

தேவையான பொருட்கள்
பூசணிக்காய் ஜூஸ் – 1/2 டம்ளர்

ஆப்பிள் சிடர் வினிகர் – 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை

பூசணிக்காய் ஜூஸ் மற்றும் ஆப்பிள் சிடர் வினிகர் ஆகிய இரண்டையும் சரியான அளவில் கலந்தால், வயிற்று வலியை போக்கும் அற்புதமான பானம் தயார்.
எப்போது குடிக்கலாம்?

வாய்வு பிரச்சனையால் கடுமையான வயிற்று வலி ஏற்படும் போது இந்த பூசணிக்காய் ஜூஸை குடித்தால், உடனடியாக நல்ல பலன் கிடைக்கும்.

மேலும் இந்த முறையை பின்பற்றுவதுடன், ஆரோக்கியமான உணவுகள் சாப்பிடுதல், நல்ல உடற்பயிற்சி செய்தல் போன்ற வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியமாகும்.

நன்மைகள்
பூசணிக்காய் இயற்கையிலேயே அல்கலைன் ஆகும். எனவே இது வயிற்றில் உள்ள ஆசிட் அளவை குறைத்து, வயிற்று வலி பிரச்சனையில் இருந்து உடனடி நிவாரணம் தருகிறது.
ஆப்பிள் சிடர் வினிகர் வயிற்றில் அமிலத்தன்மையை நடுநிலையாக்கி, வயிற்று எரிச்சல், வயிற்று வலி மற்றும் வாய்வு போன்ற பிரச்சனைகளை குணமாக்க உதவுகிறது.

Add Comment

%d bloggers like this: