கரடு முரடாய், வெடிப்புடன் இருக்கும் பாதத்தை பட்டு போல் ஆக்கும் வழிமுறைகள்

தேவையானவை :
வெள்ளை சர்க்கரை – 1 கப்
சமையல் சோடா- 2 ஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் – 2 ஸ்பூன்
தேன் – 2 ஸ்பூன்

விருப்பமிருந்தால் : உங்களுக்கு விருப்பமிருந்தால் இந்த எண்ணெய்களையும் சேர்த்துக் கொள்ளலாம். இல்லையென்றாலும் பிரச்சனையில்லை. மேலே சொன்னவற்றை மட்டும் தொடருங்கள். ஜுஜுபா எண்ணெய் – 1 டீஸ்பூன் வாசனை எண்ணெய் ( பாதாம், லாவெண்டர்) – சில துளிகள்.

செய்முறை : ஒரு கிண்ணத்தில் சர்க்கரையை போடுங்கள். அதில் ஆலிவ் எண்ணெயை சேர்த்து கலக்குங்கள். பிறகு சமையல் சோடா சேர்க்கவும். நன்றாக கலந்த பின் தேனை சேருங்கள். நன்றாக கலந்தபின் ஜொஜொபா எண்ணெய் மற்றும் வாசனை எண்ணெய் கலக்கவும்.

உபயோகிக்கும் முறை : குளிப்பதற்கு முன் இந்த ஸ்க்ரப்பை பயன்படுத்துங்கள். கால்களில் வட்ட வடிவில் தேய்க்கவும். கடினமான பகுதிகலில் அதிக கவனம் செலுத்துங்கள். 5 நிமிடம் இதனைக் கொண்டு ஸ்க்ரப் செய்த பின் குளிக்கவும். சோப் எதுவும் போட வேண்டாம். இது ஈரப்பதம் அளிக்கும். தினமும் இவ்வாறு செய்தால் பாதங்கள் மிருதுவாகி வெடிப்பின்றி காட்சியளிக்கும்.

கைகளுக்கும் : இந்த ஸ்க்ரபை கைகளுக்கும் உபயோகபடுத்தலாம். இதனை கைகளுக்கு பயன்படுத்தும் போது கைகளில் இருக்கும் கரும்புள்ளிகள், முடிகள் அகன்று மிருதுவாகும்.

Add Comment

%d bloggers like this: