கூந்தல் பளபளப்பாகவும்,மென்மையாகவும் இருக்க வேண்டுமா?

முடியை எப்படி மென்மையாகவும், பளபளப்பாகவும் வீட்டிலேயே கிடைக்கும் ஒரு சில பொருட்களை கொண்டு எப்படி மாற்றுவது என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.

1. முட்டை மற்றும் எலுமிச்சை முட்டை 2 ஆலிவ் ஆயில் 2 டீஸ்பூன் அல்லது பாதாம் எண்ணெய் எலுமிச்சை 2 டீஸ்பூன்

செய்முறை இரண்டு முட்டைகள் மற்றும் 2 டிஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்து கொள்ள வேண்டும். இதில் 2 டிஸ்பூன் ஆலிவ் ஆயில் அல்லது பாதாம் எண்ணெய் ஆகியவற்றை கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை நன்றாக மிக்ஸ் செய்து, முடியின் வேர் பகுதியில் நன்றாக மசாஜ் செய்து கொள்ள வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து மிதமான ஷாம்புவை கொண்டு தலையை அலசிக்கொள்ளுங்கள்.

2. தேங்காய் எண்ணெய் தேங்காய் எண்ணெய் கறிவேப்பிலை

செய்முறை :
2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன் 5 முதல் 6 கறிவேப்பிலை சேர்த்துக்கொள்ளுங்கள். இந்த கலவையை 2 முதல் 3 நிமிடங்கள் சூடேற்றுங்கள். பின்னர் இதனை ஆற விடவும். ஆறிய எண்ணெயை தலையில் இட்டு நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் ஒரு டவளை எடுத்து அதனை மித வெப்பம் உள்ள தண்ணீரில் நனைத்து, டவலில் உள்ள தண்ணீரை பிழிந்து எடுத்துவிடுங்கள். இந்த டவலை தலையில் 15 நிமிடங்கள் வரை கட்டிக்கொள்ளுங்கள்.

3. ஆயில் மசாஜ் முடி மற்றும் முடியின் வேர்க்கால்களை மிருதுவாக்க, முடிக்கு புரோட்டின் மற்றும் கொழுப்பு தேவைப்படுகிறது. அதற்காக, நீங்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் ஆலிவ் ஆயில் அல்லது பாதாம் எண்ணெய் போன்றவற்றை கொண்டு தலைமுடிக்கு நன்றாக மசாஜ் செய்து கொள்ளுங்கள். இதனை இரவு முழுவதும் தலையிலேயே விட்டுவிட்டு காலையில் மைல்டு ஷாம்பு போட்டு தலையை அலசிக்கொள்ளுங்கள்.

4. வாழைப்பழம் மற்றும் தேன் மாஸ்க் முடிக்கு ஹேர் பேக் போடுவது மிகச்சிறந்த தீர்வாக அமையும். இது முடியை பலமாக்குவதோடு மட்டுமல்லாமல், மிருதுவாக்கவும் உதவுகிறது. வாழைப்பழத்தில் கார்போஹைட்ரைட்டுகள் அதிகளவில் உள்ளது. இதில் ஃபேட்டி ஆசிட் அதிகளவில் உள்ளது. தேன் முடியை மென்மையாக்க உதவுகிறது. இதில் ஆன்டி பாக்டீரியல் தன்மை உள்ளது. இது முடியின் வேர்க்கால்களில் ஏற்படும் அரிப்புகளையும், பொடுகு பிரச்சனை மற்றும் தொற்றுக்களையும் நீக்க உதவுகிறது.

செய்முறை : 1. ஒரு வாழைப்பழத்தை பௌலில் போட்டு இரண்டு ஸ்பூன் சுத்தமான தேனை அதில் ஊற்றி கலக்கவும். 2. இந்த பசையை தலையில் நன்றாக அப்ளை செய்து, மிருதுவாக மசாஜ் செய்ய வேண்டும். 3. இதனை 45 நிமிடங்கள் தலையிலேயே வைத்துவிட்டு பின்னர் குளிர்ந்த நீரினை கொண்டு அலச வேண்டும்.

5. முட்டை மற்றும் ஆலிவ் ஆயில் இந்த இரண்டு பொருட்களிலுமே அதிகளவு புரோட்டின் உள்ளது. இது மிகச்சிறந்த பலனை கொடுக்ககூடியது. முட்டையில் அதிகளவு புரோட்டின் உள்ளது. இதில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் உள்ளது, இது முடியை உறுதியாக்கவும், மென்மையாக்கவும் உதவுகிறது. ஆலிவ் ஆயிலில் அதிகளவு ஆன்டி ஆகிஸிடண்ட் உள்ளது. இது இயற்கை கண்டிஷனராக செயல்படுகிறது.

எப்படி பயன்படுத்துவது? முட்டையை உடைத்து அதன் வெள்ளை கருவை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும். நான்கு ஸ்பூன் ஆலிவ் ஆயிலை அதில் ஊற்றி நன்றாக கலக்க வேண்டும். இந்த கலவையை முடியில் தடவி நன்றாக சில நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இதனை முப்பது நிமிடங்கள் விட்டு, பின்னர் தலைமுடியை குளிர்ந்த நீரால் அலசுங்கள்.

Add Comment

%d bloggers like this: