முட்டை பணியார குழம்பு

தேவையானவை:
பணியாரம் செய்வதற்கு: முட்டை – 3, சின்ன வெங்காயம் – 100 கிராம், பச்சை மிளகாய் – 2, இட்லி மாவு – கால் கப், மிளகுத்தூள், மஞ்சள்தூள், உப்பு – சிறிதளவு.
குழம்பு செய்வதற்கு: சின்ன வெங்காயம் – 10, பழுத்த தக்காளி – 100 கிராம், தேங்காய் – சோம்பு அரைத்த விழுது – சிறிதளவு, ஆச்சி முட்டை குழம்பு மசாலா – 20 கிராம், பட்டை – ஒரு துண்டு, கிராம்பு – ஒன்று, கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு – சிறிதளவு.

செய்முறை:
முட்டையை ஒரு பாத்திரத்தில் அடித்து வைக்கவும். பச்சை மிளகாயையும் வெங்காயத்தையும் பொடியாக நறுக்கி வதக்கவும். உப்பு, மிளகுத்தூள், மஞ்சள்தூள் அடித்த முட்டை, வதக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இட்லி மாவு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்துக் கொள்ளவும். இந்தக் கலவையை குழிப்பணியார சட்டியில் சிறு பணியாரங்களாக சுட்டு எடுக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை தாளித்து… நறுக்கிய சின்ன வெங்காயம், தக்காளியை சேர்த்து வதக்கவும். நன்கு வதக்கிய பின் ஆச்சி முட்டை குழம்பு மசாலா, அரைத்த தேங்காய் – சோம்பு விழுது சேர்த்து, தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். நன்றாக கொதித்து மணம் வந்ததும், முட்டை பணியாரங்களை சேர்த்து இறக்கி வைக்கவும்.

Add Comment

%d bloggers like this: