பளிச்சென்று மாற நீங்கள் செய்ய வேண்டிய உடனடி அழகுக் குறிப்புகள்!!

எப்போதும் ஒரு குறிப்பிட்ட உடல் பாகத்திற்கு அழகு குறிப்புகளை சொல்வதை தொடர்ந்து இப்போது ஒரே பதிவில் பல அழகு குறிப்புகளை பார்க்கலாம். இதனை முயற்சித்து உங்கள் மொத்த உடல் அழகை பெறலாம்.

இவை எல்லாமே இயற்கையான முறையில் கொடுக்கப்படும் தீர்வுகள் தான் . அதனால் பக்க விளைவுகளின்பற்றிய கவலை வேண்டாம்.

கண்கள் சோர்வை நீக்க:
ப்ளாக் டீ பேக் , க்ரீன் டீ பேக் , செவ்வந்தி பூ டீ பேக் இவற்றில் எதாவது ஒரு டீ பேக்கை 2 no எடுத்துக் கொள்ளவேண்டும். இதனை நன்றாக கொதிக்கும் நீரில் 1 நிமிடம் வரை போட்டு பின்பு அதனை எடுத்து சிறிது நேரம் ப்ரிட்ஜில் வைக்கவும். நன்றாக குளிர்ந்த டீ பேக்கை எடுத்து மூடிய கண்களின் மேல் வைக்கவும். இதனை 5-15 நிமிடங்கள் அப்படியே விட்டு விடவும். பிறகு கண்களை குளிர்ந்த நீரால் கழுவவும். உங்கள் கண்கள் புத்துணர்ச்சி அடையும்.

பளிச்சென்ற உதடுகள் பெற: 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை அடுப்பில் வைத்து லேசாக சூடாக்கவும். பின்பு அடுப்பில் இருந்து எடுத்து அதில் 4 கனிந்த ராஸ்பெர்ரி பழங்களை போடவும். நன்றாக கூழாகும் வரை மசிக்கவும். சிறிது நேரம் ப்ரிட்ஜில் வைக்கவும். குளிர்ந்தவுடன், சுத்தமான விரல்களால் உங்கள் உதடுகளில் தடவவும். இதனை தினமும் செய்து வர விரைவில் உதடுகள் பளிச்சிடும்.

மென்மையான சருமம் பெற: மாதுளை விதை எண்ணெய், ராஸ்பெர்ரி விதை எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் ஆகியவற்றை சம அளவில் எடுத்து ஒன்றாக கலக்க வேண்டும். உங்கள் கைகளில் 2-3 சொட்டு விட்டு நன்றாக கைகளை தேய்க்கவும். பின்பு உங்கள் விரல்களை கொண்டு உங்கள் சருமத்தில் நன்றாக மசாஜ் செய்யவும். சுருக்கங்கள் அல்லது கோடுகள் சருமத்தில் அல்லது முகத்தில் இருந்தால் மெல்ல மறையும் . இது வறண்ட சருமத்தை ஈரப்பதம் பெற செய்யும். க்லென்சிங் செய்த பிறகு அல்லது மேக்கப் களைத்த பிறகும் இதனை செய்யலாம். சருமம் மிகவும் மென்மையாகும்

பருக்களை போக்க: டீ ட்ரீ எண்ணெய் மருத்துவ குணம் கொண்டது. கிருமிகளை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது. பருக்களை குறைப்பதற்கு இதனை பயன்படுத்தலாம் என்று பல ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இந்த எண்ணெய்யை நல்ல திரவமாக்கி கொண்டு பயன்படுத்த வேண்டும். அப்படியே நேரடியாக பயன்படுத்தும்போது சருமத்தில் எரிச்சல் தோன்றலாம். உங்கள் மாய்ஸ்ச்சரைசருடன் 1 அல்லது 2 துளி டைல்யூட் டீ ட்ரீ எண்ணெய்யை கலந்து முகத்தில் தடவலாம். ஒரு நாளைக்கு 2-3 முறை இதனை பயன்படுத்துவதால் பருக்கள் விரைவாக மறையும்.

சருமம் ஆரோக்கியம் பெற: சருமத்தில் சிவப்பு நிற திட்டுக்கள் அல்லது எரிச்சல்கள் சில நேரம் தோன்றலாம். இது தொடர்ச்சியாக ஏற்படுவதால் சருமத்தில் கொலாஜென் இழப்பு ஏற்படலாம். உங்கள் சருமத்தை மென்மையாக்க கற்றாழையை பயன்படுத்தலாம். இது சருமத்திற்குள் ஊடுருவி, கிருமிகளை போக்கி, புத்துணர்ச்சியை தருகிறது. கற்றாழை இலையை உடைத்து அதன் ஜெல்லை சருமத்தில் தடவலாம். சிறிது நேரத்திற்கு பின்பு குளிர்ந்த நீரில் கழுவுவதால் சருமம் புத்துணர்ச்சி அடையும். வாசகர்களே! அழகு குறிப்புகளை தெரிந்து கொண்டீர்களா? உடனே முயற்சித்து இன்றே உங்களை மேலும் அழகாக்குங்கள்!

Add Comment

%d bloggers like this: