அழகான தனது கூந்தலை வெட்டிக்கொண்டு கம்பீரமாக திகழும் பிரபலங்கள்!

சங்க காலம் முதலே பெண்கள் தங்களது கூந்தல் அழகிற்கு பேர் போனவர்கள். நீளமான, அடர்த்தியான கூந்தல் தான் பெண்களுக்கு அழகு என்ற ஒரு கருத்தையே மாற்றியுள்ளனர் இந்த சில பிரபலங்கள். இவர்கள் தங்களது முடியை வெட்டிக்கொள்ள காரணம், திரைப்படத்திற்காக அல்லது ஸ்டைலாக தோன்ற வேண்டும் என்பதற்காக தான்.

காரணம் என்னவாக வேண்டுமானலும் இருக்கட்டும். ஆனால் முடியை இவ்வாறு வெட்டிக்கொண்டு கம்பீரமாக இருக்கும் பெண்களுக்கு தன்னம்பிக்கை சற்று அதிகமாக தான் இருக்கிறது.

கேட் ஹட்சன் அமெரிக்க நடிகையான இவர் தனது புதிய திரைப்படம் ஒன்றிற்காக தனது முடியை வெட்டிக்கொண்டார். தற்போது முடியே இல்லாத இந்த தோற்றத்தில் கம்பீரமாக உலா வந்துகொண்டிருக்கிறார்.


ஜெனிபர் ஹட்சன்
ஜெனிபரின் கவரும் அழகான புன்னகைக்கு சொந்தக்காரி ஆவார். இவர் முடியை எடுத்த இந்த தைரியமான செயலுக்காக பாரட்டப்படுகிறார்.


கேரா டெலிவிங்னே
இவர் தனது முடியை மொட்டை அடித்துக்கொண்டது என்னவோ படத்திற்காக தான் என்றாலும், இவருக்கு இந்த தோற்றம் பிடித்துப்போகவே இந்த தோற்றத்திலேயே இருக்கிறார்.

மில்லி பாபி பிரவுன் மில்லி பாபி பிரவுன் பதினொரு வயதான ஒரு குழந்தை தான். இந்த நடிகை தனது எதிர்புகளை தாண்டி வெளியில் வருவதற்காகவும், தனது படத்திற்காகவும் இந்த சின்ன வயதிலேயே அவருக்கு உள்ள ஈடுபாடு காரணமாகவும் மொட்டை அடித்துக் கொண்டார்.


ஒவியா பிக் பாஸ்
புகழ் ஒவியா, தனது கூந்தலை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தியானம் செய்து, அழகை விட குணமே சிறந்தது என்பதை நிரூபித்துள்ளார்


ஜெஸ்ஸி ஜே
பொன்னிற மேனி கொண்ட இவர், சமீப காலமாக தனது முடியை எடுத்துவிட்டும் பெரிய காதணிகளை அணிந்து கொண்டும் தனது இரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.

நடாலி போர்ட்மேன் இவர் தனது புதிய படத்திற்காக தனது முடியை மிகவும் குட்டையாக வெட்டிக்கொண்டுள்ளார். இவருக்கு இயற்கையாகவே தன்னம்பிக்கை அதிகம் தானாம்.

அமன்டாலா ஸ்டென்ன்பெர்க் இவர் அமெரிக்க நடிகை மற்றும் பாடகி ஆவார். இவர் தனது புதிய படத்திற்காக தனது முடியை தானாகவே சேவ் செய்து கொண்டவர்.
http://indianbeautytips.net/ta/wp-content/uploads/2017/10/26-1506406579-8.jpg
கேட்டி பெர்ரி இவர் ஒரு பாடகி ஆவர். இவர் தனது ஹேர் ஸ்டைலில் ஏதேனும் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று நினைத்து, தனது இரு காது மடலுக்கு மேல் உள்ள பகுதியையும் முழுமையாக சேவ் செய்து, மீதி முடிகளை ஷார்ட் செய்துள்ளார். இந்த லுக் இவருக்கு மிகவும் அழகாக தானே இருக்கிறது…!

Add Comment

%d bloggers like this: