எப்பவும் சாப்பிட்டுட்டே இருக்கனும்னு தோணுதா? அது என்ன நோய்ன்னு உங்களுக்கு தெரியுமா?

உணவு என்பது அத்தியாவசியம் என்ற இடத்தை கடந்து ஆடம்பரம் என்ற இடத்தை நோக்கி நகர்ந்து விட்டது. உணவுகளைச் சுற்றி பெரிய சந்தையே உருவாகிவிட்ட நேரத்தில் நோய்களும் பெருகிவிட்டிருக்கிறது. இன்றைய ஃபாஸ்ட் புட் உலகத்தில் புதுப்புது நோய்கள் வந்து கொண்டிருக்கிறது. அப்படி வந்திருக்கும் ஒரு நோய் தான் மிதமிஞ்சிய உணவுகளை உண்பது.

காரணங்கள் :
இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. அவற்றில் சில, உடல் ரீதியாகவென்றால் , நம் ஹார்மோன்களில் ஏதனும் மாற்றம் ஏற்ப்பட்டால் அல்லது சிலருக்கு ஜெனிட்டிக் ஆகவே இந்த பாதிப்பு ஏற்படும்.

மனரீதியாக என்றால், முக்கிய காரணம் மன அழுத்தம். உணர்வுகளை கையாளத் தெரியாததும், அதீத கோபமும் காரணம்.
இவற்றைத் தாண்டி இந்த பிரச்சனைக்கு சமூகரீதியிலான காரணங்களும் உண்டு, உடல் எடையை காரணம் வைத்து கிண்டலடிப்பது, ஊடகங்களில் காட்சிப்படுத்தும் விஷயங்கள்,பயம் போன்றவையும் காரணமாக இருக்கலாம்.

அறிகுறிகள் : வயிறு முட்ட சாப்பிட்ட பின்பும் இன்னும் இன்னும் சாப்பிடத்தூண்டும். எவ்வளவு சாப்பிடுகிறோம் எப்போது நிறுத்த வேண்டும் என்று தன்னாலேயே நிறுத்த முடியாமல் போகும். நேரங்கெட்ட நேரத்தில் உணவுகளைத் தேடுவது,சாப்பிட்டால் ரிலாக்ஸாக இருக்கும், சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும் என எதையாவது ஒன்றோடு கூட்டு சேர்த்து பேசுவது போன்ற அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக சிகிச்சையளிக்க வேண்டும். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக உடல் எடை கொண்டவராக இருக்க மாட்டார்கள்.

பாதிப்புகள் : சாதரணமாக சாப்பிடுபவர்களுக்கே நோய்கள் வரும் போது, இப்படி அதீதமாகச் சாப்பிடுவது பெரும் ஆபத்துக்களை ஏற்படுத்தும், சர்க்கரை நோய், இதயக்கோளாறு ,ஒபீசிட்டி என இதனால் ஏற்படும் பிரச்சனைகள் ஏராளம்.

சைக்கோதெரபி : இந்நோய்க்கான சிகிச்சைமுறைகளில் ஒன்று. பெரும்பாலும் அவர்களின் மனக்குறையை யாரிடமும் சொல்ல முடியாத போது அல்லது தீர்க்க முடியாத போதுதான் இப்பிரச்சனை ஏற்படுகிறது என்பதால் சைக்கோதெரபி கொடுக்கலாம்.

பிஹேவியர் தெரபி : இவர்களுக்கு என்ன செய்து கொண்டிருக்கிறோம். நம்முடைய செயல் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதைப் பற்றிய புரிதலை ஏற்படுத்த வேண்டும். தவறு என்று உணர்த்த வேண்டும். இந்த பிஹேவியர் தெரபியில் அன்றாட தினசரி வேலைகள் குறித்தும், ஆரோக்கியம் குறித்தும் சொல்லிக் கொடுக்கப்படும்.

தியானம் : அலைபாயும் மனதை அடக்க தியானம் ஓர் வடிகாலாக இருக்கிறது,. இந்நோயுடன் ஏற்படும் மன ரீதியிலான பிரச்சனைகளை சந்திக்கவும் தியானம் பெரிதும் உதவிடும். மனதில் மாற்றங்கள் ஏற்ப்பட்டால் அல்லது மன அழுத்தம் குறைந்தால் அதீதமாக சாப்பிடுவது குறைந்துவிடும்.

கவுன்சிலிங் : இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கலாம். அதில் உணவு குறித்த விழிப்புணர்வை அவர்களுக்கு ஏற்படுத்தலாம்.

க்ரூப் தெரபி : இந்த தெரபியில் பாதிக்கப்பட்ட நபர் அல்லாது அவரது குடும்பமும் பங்கேற்க வேண்டும். பாதிக்கப்பட்ட நபரை எப்படி கையாள வேண்டும், அவரை மீட்க என்னென்ன முயற்சிகள் எடுக்க வேண்டும், அப்படி அவரை உணவிலிருந்து வேறு பக்கம் திசை திருப்புவது போன்றவை கற்றுத்தரப்படும்.

Add Comment

%d bloggers like this: