ஏன் அண்ணாந்து தண்ணீர் குடிக்க கூடாது என உங்களுக்கு தெரியுமா?

நீர் இன்றி அமையாது உலகு என்பார்கள். நீர் இன்றி உயிர்களின் நல்ல ஆரோக்கியமும் கூட அமையாது தான். எந்த உயிரினமாக இருந்தாலும், தண்ணீர் மிக அவசியமான ஒன்று. உணவின்றி கூட வாழ்ந்துவிடலாம். ஆனால், நீரின்றி இரண்டு நாட்களை கடப்பதே பெரிது.

தண்ணீரை மண்பானையில் குடிப்பதிலும், பித்தளைக் குடத்தில் குடிப்பதிலும் கூட ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன. ஏன், நீங்கள் தண்ணீர் குடிக்கும் முறைகளில் கூட நல்லது தீயது என இருக்கிறது. ஏன் தண்ணீரை வேகமாக குடிக்க கூடாது, நின்றுக் கொண்டே குடிக்க கூடாது என இனிக் காண்போம்.

8 கிளாஸ்! ஒருவர் ஒரு நாளுக்கு எட்டு டம்ளர் அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். ஆனால், நீங்கள் தண்ணீர் குடிக்கும் வகை கூட உங்கள் ஆரோக்கியத்தை கெடுக்கும் என்பதை நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்
நின்று கொண்டு தண்ணீர் குடிப்பது? நீங்கள் நின்று கொண்டு தண்ணீர் குடிப்பது, வயிற்றில் தெறித்து விழும்படி ஆகிறது. திடீரென வயிறில் வேகமாக தண்ணீர் செல்வது, அருகே அமைந்திருக்கும் உடல் உறுப்புகளில் தாக்கத்தை உண்டாக்கும். முக்கியமாக குடல் மற்றும் செரிமான மண்டல இயக்கத்தை பாதிக்கும்.

சிறுநீரகம்! நின்று கொண்டு தண்ணீர் குடிப்பது, சிறுநீரகத்தின் வடிக்கட்டுதல் தன்மையை பாதிப்படைய செய்யும் என கூறப்படுகிறது. சரியாக வடிகட்டுதல் ஆகாவிடில், சிறுநீரக கோளாறுகள், சிறுநீர் பாதை தொற்று / கோளாறுகள் உண்டாகலாம்

]மூட்டு வலி! நின்று கொண்டே தண்ணீர் குடிப்பது, உடலின் நீர் சமநிலையை பாதிக்கிறது. இதனால், மூட்டு பிரச்சனைகள் உண்டாகலாம்.

செரிமானம்! நின்றுக் கொண்டே தண்ணீர் குடிப்பது, செரிமான சிக்கல்களை கொண்டு வரும். மேலும் GERD எனப்படும் இரைப்பைஉணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் உண்டாகவும் இது காரணியாக இருக்கிறது

வாய் வைத்து குடியுங்கள்! ஆயுர்வேத முறையில் தண்ணீரை வாய் வைத்து, மெல்ல, மெல்ல சிப் செய்து குடிப்பது தான் நல்லது என கூறப்பட்டிருக்கிறது. மேலும், தண்ணீரை வேகமாக குடிப்பதை தவிர்க்க வேண்டியது அவசியம்.

Add Comment

%d bloggers like this: