முகப்பரு விஷயத்தில் இதெல்லாம் பொய்யா?

முகத்தில் தோன்று மிக முக்கிய பிரச்சனைகளில் ஒன்று பரு. பருக்களை வராமல் தடுக்கவும், அவற்றின் தழும்புகளை போக்கவும் பல முயற்சிகளை எடுத்திருப்போம். முகத்தில் தோன்றும் இந்தப் பருக்களைச் சுற்றியே பல கட்டுக்கதைகளும் தவறான புரிதல்களும் இருக்கிறது.

இடம் :
பரு தோன்றும் இடத்திற்கு ஏற்ப அதன் தன்மை மாறுபடும் என்று சொல்லப்படுகிறது இது முற்றிலும் தவறானது. பருக்கள் தோன்றுவதே சருமத்தில் அழுக்கு சேர்ந்திருப்பதலோ அல்லது சருமத்தில் அதிகப்படியான ஆயில் சுரந்தால் தோன்றும்.

இளம்பருவத்தினர் :
பருக்கள் இளம்பருவத்தினருக்கு மட்டும் தான் தோன்றும் என்ற கருத்து பரவலாக பேசப்படுகிறது. இதுவும் தவறான கருத்து, பருக்களில் பெர்சிஸ்டண்ட் ஆக்னி லேட் ஆன்செட் ஆக்னி என இரண்டு வகைகள் இருக்கின்றன பெர்சிஸ்டண்ட் ஆக்னி இளம்பருவத்தினருக்கு வருவது. லேட் ஆன் செட் ஆக்னீ 25 வயது கடந்தவர்களுக்கு ஏற்படுவது.

பெண்களுக்கு அதிகம் :
ஆண்களை விட பெண்களுக்கு அதிகமாக பருக்கள் தோன்றும் என்று சொல்லப்படுகிறது. இது உண்மையானது. 12 முதல் 22 சதவீத பெண்களுக்கு பருக்கள் வரும் இடத்தில் 3 சதவீத ஆண்களுகு தான் பருக்கள் தோன்றுகிறது.
இதற்கு காரணம் பெண்களுக்கு அடிக்கடி ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுவதே ஆகும்.

சுத்தம் :
சருமத்தை சரியாக பராமரிக்கவில்லை என்றால் தான் பருக்கள் தோன்றும் என்று இல்லை. சிலருக்கு பரம்பரையாகவும் பருக்கள் தோன்றுவதுண்டு.
சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் சுரந்து, மயிர்க்கால்களுக்கு தேவையான காற்றோட்டம் இல்லாத போதும் ஹார்மோன் மாற்றத்தினாலும் பருக்கள் தோன்றும்.

வாழ்க்கை முறை :
முகத்தில் அழுக்கு சேராமல் பார்த்துக் கொள்வது அவசியம். அதிகமான எண்ணெயில் பொறித்த உணவுகள், பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை சாப்பிடுவதும் இதில் ஓர் காரணம். அதே போல அதிக மன அழுத்தம் ஏற்ப்பட்டாலும் பருக்கள் வரும் அதனால் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வதுடன் உடற்பயிற்சி மற்றும் யோகா அல்லது தியானம் போன்றவற்றை கடைபிடிக்கலாம்.

தொற்று :
பருக்கள் பரவும் என்பது பொய்யான கருத்து. பருக்கள் பரவாது. பாக்டீரியாக்களால் பருக்கள் தோன்றினாலும், மற்ற பாக்டீரியா போல இவை பரவாது. நீங்கள் பயன்படுத்தும் டவல், தலையணை,பெட்சீட் போன்றவை சுத்தமாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

பேஷியல் :
பருக்கள் இருந்தால் பேஷியல் செய்யக்கூடாது அது பரவிடும் என்று சொல்வது டஹ்வறு. தாரளமாக பேஷியல் செய்யலாம். அவை சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெயை கட்டுப்படுத்தும் . சருமத்தை சுத்தமாக்கும். அதோடு சரும துவாரங்களை திறப்பதுடன் இறந்த சரும செல்களை நீக்கிடும். இதனால் பருக்கள் விரைவில் மறையுமே தவிர பரவாது.

கிள்ளுதல் :
பருக்களை கிள்ளவோ அல்லது அதனை உடைக்கவோ கூடாது. ஏனென்றால் அது முகத்தில் நிரந்தர தழும்பை உண்டாக்கிடும். சத்தான உணவுகள், மற்றும் உங்கள் சருமத்தை எப்போதும் ஈரப்பதத்துடன் பராமரித்தாலே பருக்கள் தோன்றுவது குறைந்திடும்.

மேக்கப் :
மேக்கப் போடுவதால் தான் பருக்கள் வருவது என்று சொல்வது தவறான கருத்து. மேக்கப் போட பயன்படுத்தும் பவுடர், பிரஷ் போன்றவற்றால் அலர்ஜி ஏற்ப்பட்டு பருகள் வர வாய்ப்புண்டு,அதே போல பரு இருந்தால் மேக்கப் போடாக்கூடாது என்பதும் அல்ல. மைல்ட்டாக போடலாம். உங்கள் சருமத்தின் தன்மைக்கேற்ப ஆயில் ஃப்ரீ மேக்கப் போடலாம்.

Add Comment

%d bloggers like this: