இனிப்பு வடை

என்னென்ன தேவை?

உளுத்தம்பருப்பு – ஒரு கப்
தேங்காய்த் துருவல் – கால் கப்
வெல்லம் – அரை கப்
எண்ணெய் – பொரிக்க.

எப்படிச் செய்வது?

உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பின் ஜாரில் உளுத்தம்பருப்பை எடுத்து அரைக்கவும். பாதி அரைபட்டதும் தேங்காய்த் துருவல் சேர்த்து அரைக்கவும். பின் வெல்லம் சேர்த்து கெட்டியாக அரைத்தெடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் மாவை சிறிய வடைகளாகத் தட்டி, எண்ணெயில் போட்டு, அடுப்பை சிம்மில் வைத்து, இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

Add Comment

%d bloggers like this: