அனைத்து விதமான தழும்புகளையும் விரைவில் மறைய வைக்க இது மட்டும் போதும்!

மாசு மருக்கள் எல்லாம் இல்லாமல் புதிதாக பூத்த ரோஜாவை போல இருந்த முகம் தற்போது எல்லாம் மாசு, மருக்கள் நிறைந்த தழும்புகள் உள்ள சருமமாக மாறிவிட்டதா? தழும்புகள் பல வகைப்படும். ஆடைகளை இறுக்கமாக அணிவதால் உண்டாகும் தழும்புகள், அம்மை தழும்புகள், பிரசவ தழும்புகள், முகப்பரு தழும்புகள் என பலவகைகள் உள்ளன.

 

இந்த தழும்புகள் எளிதாக நம்மை விட்டு செல்லக்கூடியவை அல்ல. அதற்காக அதை அப்படியே விட்டுவிடவும் முடியாது. தழும்புகளை மறைக்க நவீன மருத்துவத்தில் பல வழிகள் உள்ளன. லேசர் சிகிச்சையால் தழும்புகளை எளிதில் போக்கிவிட முடியும். ஆனால் அதற்கு அதிகமாக செலவாகும். பல க்ரீம்கள் உள்ளன, அவையும் விலை அதிகமாக இருக்கும். மேலும் சில பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தும் தன்மை கொண்டது. சரி, இதற்கு என்ன தான் செய்வது என கேட்டால், இயற்கையிலேயே பல நல்ல தீர்வுகள் இருக்கின்றன. இது நவீன மருத்துவ அளவிற்கு வேகமானதாக இல்லை என்றாலும், தழும்புகளை போக்க கூடியது. மேலும் பக்க விளைவுகள் அற்றதாகும்.

 

தழும்புக்கான காரணம் அம்மைக்குப் பிறகு வந்தது, பருக்கள் விட்டுச் சென்றது என தழும்புகளில் 2 வகை உண்டு. இரண்டுக்கும் தனித்தனி அணுகுமுறையும் சிகிச்சையும் அவசியம். பருக்களைக் கிள்ளுவதாலோ, உடைப்பதாலோதான் பரு உண்டாகும் என்பது பரவலான கருத்து. அது மட்டுமே காரணமில்லை. பருக்களில் பல வகை உண்டு. அவற்றில் ஒன்று சிஸ்டிக் அக்னே என்பது. பாரம்பரியமாகத் தொடரக்கூடிய இந்த வகைப் பரு, அளவுக்கு அதிக எண்ணெய் சுரக்கும் சருமம் கொண்டவர்கள், தலையில் ஃபங்கஸ் உள்ளவர்களுக்கு அதிகம் வரும். இந்தப் பரு உள்ள நபர்களின் மண்டைப் பகுதியை ஸ்கேன் செய்து பார்த்தால் உள்ளே ஃபங்கஸ் மற்றும் பாக்டீரியா தொற்று இருப்பதைப் பார்க்கலாம்.

கட்டுப்படுத்தும் முறை சிஸ்டிக் அக்னேவை கிள்ளாமலும், உடைக்காமலும்கூட அது தழும்பை விட்டுச் செல்லும். அந்தளவுக்குக் கொடுமையான குணம் கொண்டது. ஒன்றிரண்டு பரு கிளம்பும் போதே மண்டைப் பகுதியை ஸ்கேன் செய்து பார்த்து, இன்ஃபெக்ஷன் இருக்கிறதா எனத் தெரிந்து கொண்டு, மூல காரணத்தை அறிந்து அதற்கேற்ற சிகிச்சையைத் தொடங்கினால், தழும்புகளில் இருந்து தப்பிக்கலாம். டிஸ்க்ரன்ட்டேஷன் தெரபி என்கிற சிகிச்சையின் மூலம் இவர்களுக்குச் சுரக்கிற அதிகப்படியான எண்ணெயைக் கட்டுப்படுத்தலாம். அதன் மூலம் பருக்களும் அதிகரிக்காது. தழும்புகளும் வராது.

பொடுகு பிரச்சனை சிஸ்டிக் அக்னே உள்ளவர்களது சருமத் துவாரங்கள் அகண்டு, பெரிதாக இருக்கும். வெளியில் செல்லும் போது சருமத்துக்கு எந்த விதப் பாதுகாப்பும் இல்லாமல் சென்றார்களானால், இவர்களது சருமத்திலிருந்து சுரக்கும் சீபம் என்கிற எண்ணெய் பசையானது வெளியே கசிந்து, வெளிப்புற மாசுடன் சேர்ந்து சருமத் துவாரங்களை அடைத்துக் கொள்ளும். துவாரங்கள் பெரிதாக இருப்பதால் பருக்களும் பெரிய கொப்புளங்கள் போலவே வரும். இவர்கள் தலையில் பொடுகு இருக்கிறதா என்பதற்கான பரிசோதனையை செய்து பார்த்து, அதற்கான சிகிச்சையை மேற்கொண்டாலே பருவையும் அது விட்டுச் செல்கிற தழும்பையும் விரட்டலாம்.

ஆலிவ் எண்ணெய் தழும்புள்ள முகத்தில் ஆலிவ் எண்ணெயைத் தேய்த்து, முகத்தை மெல்லிய ஆவியில் சிறிது நேரம் காட்டிக் கொண்டிருக்க வேண்டும். இதனால் முகத்தில் உள்ள சிறுசிறு துளைகள் மறைந்து, தழும்புகளும் மறையத் தொடங்கும்.

சந்தனம் சந்தனப் பவுடரை ரோஸ் வாட்டர் அல்லது பாலுடன் கலந்து, அக்கலவையை முகத்தில் தேய்க்க வேண்டும். பின்னர் ஒரு மணிநேரம் கழித்து, குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.

பாதாம் பால் அல்லது நீரில் பாதாம் பருப்பை 12 மணிநேரம் ஊற வைத்து, பின் அதன் தோலை உரித்து விட்டு, அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின், அரைத்ததை ரோஸ் வாட்டருடன் கலந்து பேஸ்ட் செய்து, அந்தப் பேஸ்ட்டைத் தழும்புகளின் மீது தடவி வர வேண்டும்.

எலுமிச்சை எலுமிச்சைச் சாற்றில் பஞ்சை நன்றாக ஊற வைத்து, பின் அதை மெதுவாக முகத்தில் ஒற்றி எடுக்க வேண்டும். எலுமிச்சைச் சாற்றை தோல் உறிஞ்சும் வகையில் இவ்வாறு செய்ய வேண்டும். இதனால், எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி, தழும்புகளை மறையச் செய்து புதிய ஃப்ரெஷ்ஷான தோல் வருவதற்கு உதவும்.

பேக்கிங் சோடா பேக்கிங் சோடாவை நீரில் கலந்து, அதை தழும்புகளின் மீது ஸ்கரப் செய்து ஓரிரு நிமிடங்கள் வரை அடிக்கடி தேய்க்க வேண்டும். பின் முகத்தை மிதமான சுடுநீர் கொண்டு கழுவ வேண்டும்.

முள்ளங்கி விதை முள்ளங்கி விதைகளை நன்றாக அரைத்து, தழும்புள்ள முகத்தில் தொடர்ந்து தேய்த்து வந்தால், விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

உருளைக்கிழங்கு உருளைக்கிழங்கை நன்றாக ஜூஸாக்கி, அதை தழும்புகளில் தேய்க்க வேண்டும். உருளையில் உள்ள சல்பர் மற்றும் பொட்டாசியம் ஆகியவை தழும்புகளைக் குறைக்கும் தன்மை கொண்டவை.

க்ரீம்/ஜெல் தழும்புகளை நீக்குவதற்கென்றே, சில க்ரீம்கள் மற்றும் ஜெல்கள் கடைகளில் கிடைக்கும். அவற்றைப் பயன்படுத்தி வந்தாலும், முகத்திலுள்ள தழும்புகள் மற்றும் வடுக்கள் மறைந்து, உங்கள் முகம் பளிச்சிடும்.

லெமன் ஜூஸ் எலுமிச்சை ஒரு சிட்ரஸ் வகை பழமாகும். இதனை நீங்கள் முகத்திற்கு பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல், எலுமிச்சைச் சாற்றை தினமும் 3 முறை குடித்து வந்தாலும், முகத் தழும்புகள் சிறிது சிறிதாக மறையத் தொடங்கும்….!

அரச இலை முகப்பரு வருவதை விட வந்தபின் அது விட்டுச் செல்லும் தழும்புகள் முக அழகையே பாழ்படுத்தும். தழும்புகள் வேறு எளிதில் போகாது. முகப்பரு என்றில்லாமல் சருமத்தில் காயங்களால் உண்டாகும் தழும்பை போக்குவது சற்று கடினம். அவ்வாறு உருவாகும் தழும்புகள் மறைய, காய்ந்த அரச மர பழுப்பு இலைகளை சேகரித்து எரித்து கரியாக்கி தூள் செய்துகொள்ளுங்கள். இதனுடன் தேங்காய் எண்ணைய் கலந்து, இரவில் தழும்பு உள்ள இடங்களில் தடவி வந்தால் தழும்புகள் படிப்படியாக மறையும்.

சந்தனம், டீ ட்ரீ ஆயில் சந்தனம், தேயிலை மர எண்ணெய், எலுமிச்சை சாறு ஆகியவை பருக்களை நீக்குவதில் ஆற்றல் வாய்ந்தவையாகும். இவை தழும்புகளை லேசாக்கி எளிதில் மறைய செய்கின்றன.

தேவையானவை சந்தனம் – 1 டேபிள் ஸ்பூன் தேயிலை மர எண்ணெய் – 1 டீ ஸ்பூன் எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன் மேலே கூறிய பொருட்கள் இயற்கையான முறையில் தழும்பு இருக்கும் இடத்தில் புதிய செல்களை உருவாக்குகின்றன. கொலாஜன் இழைகளை விடுவிக்கின்றன. இதனால் தழும்பு மெல்ல மறையும். எலுமிச்சை சாறில் இயற்கையான ப்ளீச் செய்யும் ஆற்றல் உள்ளதால் அது சருமத்தை இன்னும் மென்மையாக்கி, தழும்பை லேசாக்கும்.

செய்முறை : சந்தனம், தேயிலை மர எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு ஆகிய மூன்றையும் கலந்து பேஸ்ட் போலச் செய்து கொள்ளுங்கள். இதனை தழும்பு உள்ள இடத்தில் போட்டு, 15 நிமிடங்கள் காயவிடுங்கள். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவலாம். இதனை இரவில் தூங்குவதற்கு முன் தழும்பில் போட்டுக் கொள்ளலாம். மறு நாள் காலையில் கழுவி விடலாம். தினமும் இவ்வாறு செய்தால், நாளடைவில் தழும்பு மறைந்துவிடும். முயன்று பாருங்கள்.

Add Comment

%d bloggers like this: