சுருக்கமில்லாத சருமம் கிடைக்க அரிசி டோனர் தயாரிக்கும் முறை!!

செபாசியஸ் சுரப்பிகள் என்பது சருமத்தில் உள்ள ஒரு வகை எண்ணெய் சுரப்பியாகும். இயற்கையான எண்ணெய் உற்பத்தி, நீர்சத்து போன்றவற்றை கொடுத்து, வெளிப்புற தீங்கு விளைவிக்கும் காரணிகள் மற்றும் நச்சுகளில் இருந்து சருமத்தை பாதுகாப்பது தான் இந்த சுரப்பியின் வேலையாகும். சருமத்தில் இருக்கும் செபாசியஸ் சுரப்பிகளில் தொந்தரவுகள் ஏற்படும்போது எண்ணெய் சருமத்தில் பிரச்சனைகள் தோன்றுகிறது.

அதிகமான எண்ணெய் உற்பத்தியால் சரும துளைகளில் அடைப்பு ஏற்படுகிறது. இதனால் கொப்பளம், கரும்புள்ளி, கட்டி போன்றவை ஏற்படுகின்றன. எண்ணெய் சருமமாக இருக்கும்போது முகம் வழு வழுப்பாக எண்ணெய் வழிந்து காணப்படும். இந்த தன்மையால் வெளிப்புற மாசு மற்றும் தூசு உடனடியாக முகத்தில் ஒட்டி கொள்கிறது.

சரியான சரும பாதுகாப்பு பொருட்களை தேர்ந்தெடுத்து வாங்கும்போது இந்த பாதிப்புகள் குறையும். தவறான தேர்வுகளால் சருமத்தின் pH சமநிலை பாதிக்கிறது. நமது இந்த பதிவில் எண்ணெய் சருமத்திற்கான ஒரு இயற்கை ஒப்பனை பொருளை பற்றி பார்க்க போகிறோம். பக்க விளைவுகள் இல்லாத இந்த ஒப்பனை பொருளை பயன்படுத்துவதால் சருமத்தில் உள்ள அதிகமான எண்ணெய் குறைய தொடங்குகிறது. சருமம் பொலிவாக காணப்படுகிறது.

அரிசி தண்ணீர் பயன்படுத்தி டோனர்: உலகம் முழுவதும் மனிதர்களால் உட்கொள்ளப்படும் ஒரு உணவு அரிசி. உலகின் புகழ்பெற்ற தானியங்களில் இரண்டாவது இடத்தை பிடிக்கும் அரிசி, அழகு பொருட்களின் தயாரிப்பில் பயன்படுவதில் எந்த ஒரு ஆச்சர்யமும் இல்லை. ஏனென்றால் அதில் அவ்வளவு ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன.

சருமத்தை மறுசீரமைக்கும் பணியில் முக்கிய இடத்தை பிடிப்பதால், வயது முதிர்வை தடுக்கும் கிரீம்களில் அரிசி பயன்படுத்தப்படுகிறது. கிழக்கத்திய நாடுகளில் அரிசியை சரும சிகிச்சைகளுக்கு பயன்படுத்துகின்றனர்.

ஜப்பானியர்கள் உலக நாடுகளுக்கு முன் மாதிரியானவர்கள் என்பது நாம் அறிந்ததே . அரிசி நீரை கொண்டு சரும அழகை அதிகரிப்பதை கண்டறிந்தவர்கள் ஜப்பானிய பெண்கள். அரிசி நிலங்களில் அரிசியை கழுவும் வேலை செய்யும் பெண்களில் கைகள் மென்மையாகவும் அழகாகவும் தோன்றுவதை கண்டறிந்து அரிசியை ஒப்பனை பொருட்கள் தயாரிப்பிற்கு பயன்படுத்த தொடங்கினர். அதில் வெற்றியும் கண்டனர்.

ஜப்பானிய பெண்களின் மொழுமொழு சருமத்திற்கு மிக முக்கிய காரணம் என்ன தெரியுமா? அவர்கள் பயன்படுத்தும் அரிசி நீர்தான். அரிசி நீர் என்பது அரிசி களைந்த நீர் மற்றும் அரிசி ஊறிய நீர் மற்றும் வேக வைத்த அரிசியிலிருந்து எடுக்கப்படும் கஞ்சி ஆகிய மூன்றையும் அவர்கள் பயன்படுத்தாமல் இருந்ததில்லை. இவற்றிலுள்ள மினரல்கள் மற்றும் பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள் சருமத்துளைகளால் உறிஞ்சப்பட்டு , சருமத்திற்கு தேவையான பொலிவை தருகின்றது. இவை முகச்சுருக்கத்திலிருந்து நம்மை பாதுகாப்பதோடு, சருமத்திற்கு புத்துணர்வு அளித்து என்றும் இளமையாக வைக்க உதவுகின்றது.

 

அரிசியை சரும பொலிவிற்கு பயன்படுத்தும்போது, கீழே கூறப்பட்டுள்ள நன்மைகள் கிடைக்கின்றன. சருமத்தின் மேல் புறத்தில் உள்ள அழுக்குகளை மட்டும் நீக்காமல், உள்ளிருக்கும் அதிக எண்ணெய் மற்றும் கரும்புள்ளிகளை அகற்றுகிறது. சருமத்தின் pH அளவை நிர்வகிக்கிறது. மற்றும் நாட்பட்ட பருக்கள், எக்ஸிமா மற்றும் சோரியாசிஸ் போன்ற பாதிப்புகளை குறைக்கிறது. கரும் புள்ளிகள் மற்றும் திட்டுக்களை போக்குவதால், முக பிரகாசத்தை கொடுக்கும் சிகிச்சைகளில் அரிசி பயன்படுத்தப்படுகிறது.

 

அரிசி நீர் டோனரை எப்படி செய்வது? எந்த ஒரு ரசாயனமும் சேர்க்கப்படாத ஒரு ஒப்பனை பொருள் இது. வைட்டமின், மினெரல், மற்றும் ஆன்டிஆக்ஸிடென்ட் இருப்பதால் அணுக்களை சீரமைத்து சுருக்கங்களை போக்கி வயது முதிர்வை தடுக்கிறது. தினமும் பல முறை இதனை பயன்படுத்தினாலும் , எந்த ஒரு பக்க விளைவும் ஏற்படுவதில்லை. இயற்கையான தன்மையால் சருமத்தின் துளைகளை சுத்தம் செய்து, அதிக எண்ணெய்யை வெளியேற்றுகிறது. இதனால் சருமம் அழகாக தோன்றுகிறது.

மூல பொருட்கள்: ஆர்கானிக் அரிசி – 5 டேபிள் ஸ்பூன் தண்ணீர் – 1 கப் 250 மி லி ஸ்பிரே பாட்டில் – 1 கிண்ணம் – 1

செய்முறை: 1 கப் தண்ணீரை கொதிக்க வைத்து கிண்ணத்தில் ஊற்றிக் கொள்ளவும். கிண்ணத்தில் அரிசியை போட்டு 30 நிமிடங்கள் ஊற விடவும். பின்பு நீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். இந்த நீரை ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி கொள்ளவும் . இப்பொது டோனர் தயார்.

பயன்படுத்தும் முறை: முகத்தில் மேக்கப் இல்லாமல் முகத்தை நன்றாக கழுவி கொள்ளவும். இந்த டோனரை முகத்தில் ஸ்பிரே செய்யவும். முகம் இந்த டோனரை நன்றாக உறிஞ்ச தொடங்கும். அப்படியே விடவும். மறுபடி நீரால் முகத்தை கழுவ வேண்டாம். ஒவ்வொரு நாள் காலையிலும், மேக்கப் போடுவதற்கு முன் இதனை செய்யலாம். இரவு உறங்க செல்வதற்கு முன் மறுபடி செய்யலாம்.

முகத்தில் எண்ணெய் தன்மை இன்னும் இருந்தால் பல முறை இதனை தொடர்ந்து செய்து வரும்போது நல்ல தீர்வுகள் காணப்படும். விலை அதிகமான எந்த ஒரு மூலப்பொருளும் இல்லாமல் எளிய முறையில் சருமத்தில் உள்ள எண்ணெய்த்தன்மையை போக்க உதவும் இந்த அரிசி டோனரை நீங்களும் பயன்படுத்தி முக அழகை திரும்ப பெற்றிடுங்கள்.

நன்மைகள் : இதன் தொடர்ச்சியாக பயன்படுத்தும்போது உங்களின் சருமம் மிக அழகாக மாறிவிடுவது ஊதி. சரும சுருக்கம், முகபப்ருக்கள், கருமை, சூரியக் கதிர்களால் உண்டாகும் பாதிப்புகள், சன் டேன் என பல சருமப் பிரச்சனைகளை இந்த அரிசி ஊறிய நீரினால் போக்கிவிடலாம். இதனைப் பயன்படுத்தி வெற்றி கொண்டால் நீங்களும் எங்களுடன் உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளலாம்.

Add Comment

%d bloggers like this: