முகத்தை அழகாக்கும் வித விதமான சரும ப்ளீச்சிங் பற்றி தெரிஞ்சுகோங்க!!

சரும ப்ளீச்சிங் என்பது நாம் பார்லர் அல்லது வீட்டில் செய்யும் அழகு முறையாகும். இது உங்கள் சருமத்தை உடனடியாக பொலிவுறச் செய்து சரும நிறத்தை மேம்படுத்துவதோடு சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் சரும முடிகள் போன்றவற்றை தெரியாமல் செய்வதற்கும் உதவுகிறது.

மேலும் சரும ப்ளீச்சிங் என்பது சரும நிறத்தை மேம்படுத்துதல் அல்லது சருமத்தை வெள்ளையாக்குதல் என்று அழைக்கப்படுகிறது. இதன் முக்கிய வேலை சரும நிறத்தை எல்லா இடங்களிலும் சமமாக பரப்புகிறது.

எனவே இப்படிப்பட்ட ஏராளமான நன்மைகள் கொண்ட ப்ளீச்சிங் முறைகளை பற்றி நாம் இப்பொழுது பார்க்க போறோம்.

சரும ப்ளீச்சிங் செய்வது எப்படி? உங்களுக்கான ப்ளீச்சிங் முறையை இரண்டு வகைகளில் செய்யலாம். 1) சரும ப்ளீச்சிங் க்ரீம் பயன்படுத்துதல் 2)இயற்கை முறை நீங்கள் வீட்டிலயோ அல்லது பார்லர் போன்ற இடங்களிலோ ப்ளீச்சிங் செய்யும் போது சரும ப்ளீச்சிங் க்ரீமை பயன்படுத்தலாம். ஒரு சரும ப்ளீச்சிங் க்ரீம் செட்டில் சரும ப்ளீச்சிங் க்ரீம் மற்றும் ஆக்டிவேட்டேடு பவுடர் காணப்படுகிறது. ப்ளீச்சிங் செய்வதற்கு முன்னாடி இவற்றை கலந்து தடவிக் கொள்ள வேண்டும். சரும ப்ளீச்சிங் க்ரீம் உங்களுக்கு விரைவான மாற்றத்தை உடனடியாகவே கொடுத்து விடும். இதுவே இயற்கை முறையில் செய்யும் போது நல்ல பலன் கிடைக்க கொஞ்சம் கால தாமதம் ஆகும்.

சரும ப்ளீச்சிங் க்ரீம் எப்படி வேலை செய்கிறது ? சரும ப்ளீச்சிங் க்ரீம் ஒரே ஒரு பொருளை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது. அவை ஹைட்ரோகுயினோன் ஆகும். இதன் அளவு 2% முதல் 5%வரை சரும ப்ளீச்சிங் க்ரீமில் வேறுபடுகிறது. இந்த பொருள் நமது சருமத்தில் மெலனின் நிறமி உருவாகுவதை தடுக்கிறது. இதனால் சரும நிறமேற்றம் ஏற்படுகிறது.

சரும ப்ளீச்சிங் க்ரீம்யை எப்படி பயன்படுத்துவது ? இந்த சரும ப்ளீச்சிங் க்ரீம் இரண்டு விதமான வடிவில் வருகிறது. ஒன்று க்ரீம் வடிவில் மற்றொன்று பவுடர் வடிவில் வருகிறது. சில நேரங்களில் இதனுடன் ஒரு தட்டை கரண்டியும் கொடுக்கப்படுகிறது. இந்த கரண்டியை கொண்டு முதலில் க்ரீம் மற்றும் பவுடரை உங்கள் சருமத்திற்கு ஏற்றமாறி கலந்து கொள்ள வேண்டும். இந்த கரண்டியை கொண்டு உங்கள் முகம் முழுவதும் சமமாக அப்ளே செய்ய வேண்டும். கண் மற்றும் வாய் பகுதியை சுற்றி அப்ளே பண்ணுவதை தவிர்க்கவும். இந்த சரும ப்ளீச்சிங் அப்ளே செய்தது முடிந்த பிறகு 15 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும்(வெள்ளை சருமத்திற்கு) . 10 நிமிடங்கள் மங்கிய சருமத்திற்கும் தேவை. டிஸ்யூ பேப்பர் கொண்டு முகத்தில் உள்ள ப்ளீச்சிங் க்ரீம்யை துடைத்து எடுக்க வேண்டும். சாதாரண க்ளீன்சர் பயன்படுத்தி முகத்தை நன்றாக கழுவ வேண்டும்.

இயற்கை முறையில் ப்ளீச்சிங் செய்வது எப்படி நீங்கள் உங்கள் முகத்தை இயற்கையான முறையில் ப்ளீச்சிங் செய்ய நினைத்தால் கீழ்க்கண்ட முறையை பயன்படுத்தலாம். லெமன் உருளைக்கிழங்கு தேன் பால் சந்தன பொடி அரிசி மாவு ஆரஞ்சு தயிர் கடலை மாவு லிகோரிஸ் ஜூஸ் மல் பெரி

ப்ளீச்சிங் க்ரீம் முறையை காட்டிலும் இயற்கையான ப்ளீச்சிங் முறை தான் அதிகமாக பரிந்துரைக்கப்படுகிறது.

ப்ளீச்சிங்கில் தவிர்க்க வேண்டியவை : சரும ப்ளீச்சிங் க்ரீம் பயன்படுத்தும் போது உங்கள் சருமத்திற்கான சாம்பிள் டெஸ்ட் செய்து அதன் விளைவை பார்த்து பயன்படுத்த வேண்டும். இயற்கை ப்ளீச்சிங் முறை உங்களுக்கு பயனளிக்க நேரம் எடுத்துக் கொண்டாலும் உங்கள் சருமத்திற்கு எந்த வித பாதிப்பையும் விளைவிக்காது. சரும ப்ளீச்சிங் செய்த பிறகு குறைந்தது 2 மணி நேரமாவது சூரிய ஒளி படக் கூடாது. எனவே தான் ப்ளீச்சிங் செய்வதற்கு மாலை அல்லது இரவு நேரம் பரந்துரைக்கப்படுகிறது. சரும ப்ளீச்சிங் க்ரீம் முறையை பயன்படுத்தினால் மாதத்திற்கு ஒரு முறைக்கு மேல் செய்ய கூடாது. நிறைய பேர் ப்ளீச்சிங் செய்வதால் முகத்தில் உள்ள முடிகள் வளராது என்று நம்புகின்றனர். இது முற்றிலும் தவறானது. ப்ளீச்சிங் செய்வதால் முடியின் நிறம் மங்கிப் போகுமே தவிர முடிகளை நீக்க முடியாது. சரும ப்ளீச்சிங் க்ரீம்யை உங்கள் உடம்பு முழுவதும் பயன்படுத்தி கொள்ளலாம். (உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப) இருப்பினும் கண்கள், உதடுகள் மற்றும் மென்மையான பாகங்களை சுற்றி அப்ளே செய்வதை தவிர்ப்பது நல்லது. சரும ப்ளீச்சிங் க்ரீம் உங்களுக்கு இரண்டு விதமான பக்க விளைவுகளை ஏற்படுத்தும். ஒன்று கருவளையம் மற்றும் முகத் தோலை மெல்லியதாக்கும். ஆனால் இதுள்ள நன்மை இயற்கை முறையை காட்டிலும் ப்ளீச்சிங் க்ரீம் முறை செலவு குறைவு. நிறைய ப்ளீச்சிங் க்ரீமில் மெர்குரி கலந்து இருப்பதால் நீண்ட காலமாக அதை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என சரும நிபுணர்கள் ஆலோசனை சொல்கின்றனர். மெர்குரி உங்கள் சரும தோலில் படிந்து நச்சுக்களை விளைவிக்க வாய்ப்புள்ளது என்று அவர்கள் கருதுகின்றனர். ப்ளீச்சிங் க்ரீம் பயன்படுத்த சரியான நேரம் மாலை நேரம் தான். எனவே தூங்கும் போது இதை செய்தால் ஒரு 7-8 மணி நேரம் உங்களுக்கு எந்த வித சூரிய ஒளிக் கதிர் தாக்குதலும் இருக்காது. கருமையான சருமம் கொண்டவர்கள் ப்ளீச்சிங் க்ரீம்யை 10-12 நிமிடங்கள் வைத்திருந்தால் போதும். அதற்கு மேல் வைத்திருந்தால் உங்கள் முகத்தில் உள்ள முடி கலர் மங்கி உங்கள் சரும நிறத்திற்கு துணிப்பாக தெரிய ஆரம்பித்து விடும்.

Add Comment

%d bloggers like this: